- விக்ரம் ஸ்ரீதேரன்
- ஷாபீர் கள்ளரக்கல்
- நடனம் ரோஸ்
- மிர்னா
- தீப்தி
- இந்திரஜித்
- பொற்கொடி
- பிஆர் வரலட்சுமி
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
விக்ரம் ஸ்ரீதரன் எழுதி இயக்கி தயாரித்துள்ள மிஸ்ட்ரி திரில்லர் படம், ‘பர்த் மார்க்’. இதில், ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் டான்ஸிங் ரோஸ் கேரக்டரில் வந்த ஷபீர் கல்லராக்கல் நடித்துள்ளார். ஹீரோயினாக மிர்னா, முக்கிய வேடங்களில் தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பி.ஆர்.வரலட்சுமி நடித்துள்ளனர். உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். அனுசுயா வாசுதேவன் திரைக்கதை எழுதியுள்ளார். விக்ரம் ஸ்ரீதரன் கூறுகையில், ‘இப்படத்தின் கதை ஒரு மிஸ்ட்ரி டிராமாவாக, 2 முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கிறது.
டேனியல் (அ) டேனியாக ஷபீர் கல்லாரக்கல், ஜெனிபராக மிர்னா நடிக்கின்றனர். 1990களில் கதை நடக்கிறது. கார்கில் போருக்குப் பிறகு தாயகம் திரும்பிய டேனி என்ற சிப்பாய், தன்வந்திரி என்ற பர்த் வில்லேஜுக்கு, கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியை அழைத்துக்கொண்டு செல்கிறார். எந்தச் சிக்கலும், அறுவைசிகிச்சையும் இல்லாமல் இயற்கையான பிரசவத்துக்குப் புகழ்பெற்ற அந்தக்கிராமத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளது.
சில மர்மங்கள் மற்றும் சஸ்பென்ஸ் கலந்துள்ளது. எமோஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் நடுவிலுள்ள மறையூர் என்ற கிராமத்தின் குறுக்கே அமைக்கப்பட்ட கிராமத்து அரங்குகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது’ என்றார்.
The post ‘பர்த் மார்க்’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.