×

தி போப்’ஸ் எக்ஸார்சிஸ்ட் (ஆங்கிலம்)

புகழ்பெற்ற ரோம் டயாசிஸ் தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார் கேப்ரியல் அமோர்த், பேய் ஓட்டுவதில் கைதேர்ந்தவர். அவர் பேய் விரட்டிய அனுபவத்தை ஒரு புத்தகமாக எழுதியுள்ளார். கேப்ரியல் அமோர்த் ஒரு சர்ச்சையான பாதிரியாரும் கூட. பேய் விரட்டுவதில் அவர் சில சர்ச்சைக்குரிய வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதாக சில குற்றச்சாட்டுகள் உண்டு. அதை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள படம் இது. ஸ்பெயினில் ஒரு சிறுவன் கெட்ட ஆத்மாவிடம் சிக்கிக்கொண்டு தவிப்பதாகவும், அவரை உடனே காப்பாற்றும்படியும் டயாசிஸ் அவரை ஸ்பெயினுக்கு அனுப்பி வைக்கிறது.

சாதாரண சாத்தான்தான், அதைச் சுலபமாக விரட்டி விடலாம் என்று நினைத்துச் செல்லும் கேப்ரியல் அமோர்த்துக்கு அங்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. இதையடுத்து பல்வேறு ரகசியங்கள் வெளியாகிறது. சாத்தானை கேப்ரியல் அமோர்த் விரட்டினாரா, அப்போது வெளியான ரகசியம் என்ன என்பது திரைக்கதை. ஆஸ்கர் விருது வென்ற ரூஸ்சோ, பாதிரியார் கேப்ரியல் அமோர்த்தாக நடித்துள்ளார். ‘கிளாடியேட்டர்’ போன்ற படங்களில் ஆக்‌ஷனில் அதகளம் செய்திருந்த அவர், இப்படத்தில் பாதிரியாராக அடக்கி வாசித்துள்ளார். முழு படத்தையும் தூக்கிச்சுமப்பவரும் அவர்தான்.

சாத்தான் பிடித்த சிறுவனாக பீட்டர் டிசவுஸா அவருக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறான். வழக்கமான பேய் படங்களில் இடம்பெறும் எல்லாக்காட்சிகளும் இதிலும் இருக்கிறது என்றாலும், சிறுவனின் உடலில் பேய் புகுந்து, பிறகு சகோதரியின் உடலுக்கு மாறிய பிறகு நடக்கும் சில சம்பவங்கள் திகிலூட்டுகிறது. அதிகம் பயமுறுத்தாமல் இயல்பான படமாக இது உருவாகியுள்ளது. கலித் மோஹ்தாசெப் ஒளிப்பதிவும், ஜெட் குர்ஸெல் இசையும் இயக்குனர் ஜூலியஸ் அவெரியுடன் இணைந்து சிரிக்க வைத்து பயமுறுத்துகிறது. அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது.

The post தி போப்’ஸ் எக்ஸார்சிஸ்ட் (ஆங்கிலம்) appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Gabriel Amorth ,Diocese of Rome ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நெவர் எஸ்கேப் விமர்சனம்