×

சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியில் ஒன்றியப் பேரவை தொடக்க விழா

மதுரை, ஜூலை 10: மதுரையில் உள்ள சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியில், ஒன்றியப் பேரவை தொடக்க விழா நேற்று நடைபெற்றது. மதுரை, பெருங்குடியில் உள்ள நாடார் மகாஜன சங்கம் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரி ஒன்றியப்பேரவை தொடக்க விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டுத்துறைத்தலைவர் எம்.புஷ்பராணி வரவேற்றார்.

ஆலோசகர் முனைவர் ஜி.மாரிஸ்குமார் மாணவர் ஒன்றியத்தின் சிறப்புகள் குறித்து தலைமையுரை ஆற்றினார். கல்லூரி துணைத்தலைவர் டி.குழந்தைவேல் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் செ.முருகேசன் கற்றலின் மேன்மை குறித்து விளக்கிப் பேசினார்.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் எம்.கவிதா மாணவர் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்தும், அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கியதுடன், 12 மாணவிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து வாழ்த்தினார். பின்னர் செயற்குழு உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றதை தொடர்ந்து அனைத்து மன்றத்தின் செயலாளர்களும் தங்கள் குழுக்களை அறிமுகம் செய்தனர்.

இதையடுத்து கல்லூரியில் செயல்பட்டும் மன்றங்கள் மற்றும் குழுக்கள் குறித்த அறிக்கை வாசிக்கப்பட்டது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் மற்றும் கல்வியியல் துறை முனைவர் கே.வெள்ளைச்சாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிறைவாக மாணவர் மன்ற தலைவி சர்மிளா பானு நன்றி கூறினார்.

 

The post சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியில் ஒன்றியப் பேரவை தொடக்க விழா appeared first on Dinakaran.

Tags : Union Council Inaugural Ceremony ,Shermathai ,Vasan Women's ,College ,Madurai ,Shermathai Vasan Women's College ,Nadar ,Mahajana Sangam ,Shermathai Vasan Women's ,Perungudi ,Dinakaran ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...