×

வட்டக்கிளை கூட்டம்

 

காரைக்குடி, ஜூலை 9: காரைக்குடியில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்க வட்டக்கிளை மாநாடு நடந்தது. துணைத்தலைவர் மரியகிர கோரி தலைமை வகித்தார். வட்டக்கிளை செயலாளர் அரியமுத்து விளக்கி பேசினார். வட்டக்கிளை பொருளாளர் ஜீவானந்தம் வரவு, செலவு அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்டத் தலைவர் வடிவேலு சிறப்புரையாற்றினார். காப்பீட்டு கழக ஓய்வூதியர் சங்கம் குணசேகரன், வங்கி ஓய்வூதியர் சங்கம் மாரியப்பன், பள்ளி, கல்லூரி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நலச்சங்க தலைவர் சிதம்பரம், பேராசிரியர் செய்யது அமகது, முன்னாள் தலைமை ஆசிரியர் அருள், வணிகவரித் துறை ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். வட்டக்கிளை துணை தலைவர் தர்மராஜ் நன்றி கூறினார்.

The post வட்டக்கிளை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Tamil Nadu Government All Department Pensioners Association ,Vice President ,Mariagira Kori ,Ariyamuthu ,Jeevanandam ,Dinakaran ,
× RELATED இலவச மருத்துவ முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்