×

பொது வேலைநிறுத்தத்தில் அதிமுக பங்கேற்காது: அண்ணா தொழிற்சங்கம் அறிவிப்பு

சென்னை: அண்ணா தொழிற்சங்க பேரவை (அதிமுக) செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:ஒன்றிய அரசின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் 42 தொழிலாளர் நலச் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, ஒன்றிய அரசை எதிர்த்து இன்று பொது வேலைநிறுத்தம் நடக்கிறது. இதில் தொமுச, சிஐடியு மற்றும் அதன் கூட்டமைப்பில் உள்ள 13 சங்கங்கள் கலந்து கொள்கின்றன.

இந்த தொழிற்சங்கங்கள், தமிழக அரசு பதவி ஏற்ற நான்கு ஆண்டுகளில், தொழிலாளர்களுக்கு தாங்கள் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்ததை நிறைவேற்றாமல் இருப்பதற்கு எந்தவித நடவடிக்கையை எடுத்தது, எந்த கோரிக்கையை வலியுறுத்தி குரல் கொடுத்தது. இப்போது ஒன்றிய அரசை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்வது வெறும் கண்துடைப்பு என்பதை சுட்டிக்காட்டி, அண்ணா தொழிற்சங்க பேரவை வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பொது வேலைநிறுத்தத்தில் அதிமுக பங்கேற்காது: அண்ணா தொழிற்சங்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Anna Trade Union ,Chennai ,Anna Trade Union Council ,R. Kamalakannan ,Union Government ,Domusa ,CITU… ,Dinakaran ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு...