×

ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து சிறையில் சொகுசு சசிகலாவுக்கு உதவிகள் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை: கர்நாடக அரசு அனுமதி

பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தண்டனை வழங்கியதை தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் நான்காண்டு தண்டனை காலம் கடந்தாண்டு ஜனவரி மாதம் முடிந்ததை தொடர்ந்து விடுதலையாகினர். இதனிடையில் சசிகலா, இளவரசி ஆகியோர் சிறையில் இருந்தபோது, அவர்களுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுப்பதற்காக அப்போது முதன்மை சிறை கண்காணிப்பாளராக இருந்தவர்கள் உள்பட பலர் ரூ.2 கோடி வரை லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்நிலையில், சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.எஸ்.கீதா என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு, ‘சம்பந்தப்பட்ட சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசு இதுவரை ஏன் அனுமதி வழங்கவில்லை’ என கடந்தாண்டு கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில், இவ்வழக்கு நேற்று தலைமை நீதிபதி  முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஊழல் தடுப்பு போலீசார் சார்பில் ஆஜரான வக்கீல் மன்மோகன், ‘முழு குற்றப்பத்திரிகை பெங்களூரு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிகாரிகள் மீது கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கி உள்ளது’ என்று எழுத்துபூர்வமாக தெரிவித்தார். அதை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஏற்று கொண்டது. இதை தொடர்ந்து, விரைவில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை துவங்க உள்ளது. விசாரணை துவங்கினால் சசிகலா, இளவரசி மற்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறைத்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராக நேரிடும்….

The post ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து சிறையில் சொகுசு சசிகலாவுக்கு உதவிகள் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை: கர்நாடக அரசு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Sasigala ,Government of Karnataka ,Bengaluru ,Princess ,Sutagaran ,Supreme Court ,Jayalalithah ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் கழன்று ஓடிய கன்டெய்னர் லாரியின் முன்பக்க டயர்கள்