- 16வது ஆண்டு பட்டமளிப்பு விழா
- சுந்தரேஸ்வரி பி.எட் கல்லூரி
- வருடாந்திர பட்டமளிப்பு விழா
- சுந்தரேஸ்வரி பி.எட் கல்லூரி
- வில்லிபுத்தூர்
- கல்லூரி செயலாளர்
- திலீபன்ராஜா
- பாலகிருஷ்ணன்…
- தின மலர்
வில்லிபுத்தூர், ஜூலை 8: வில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தரேஸ்வரி பிஎட் கல்லூரியின் 16வது பட்டமளிப்பு விழா கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி செயலாளர் திலீபன்ராஜா தலைமை வகித்து பட்டமளிப்பு விழாவை துவக்கி வைத்தார். விழாவிற்கு கல்லூரியின் நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் மல்லப்பராஜ் கலந்து கொண்டவர்களை வரவேற்று பேசி ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக வில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜா கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டி பேசினார். ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
The post சுந்தரேஸ்வரி பிஎட் கல்லூரியில் 16வது ஆண்டு பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.
