×

அரியலூர் அண்ணாசிலை அருகே கிராமங்களில் செவிலியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்

 

அரியலூர், ஜூலை 8: அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு அரசு கிராம, பகுதி, சமுதாய செவிலியர் கூட்டமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியினை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. கிராமங்களில் உடனடியாக சுகாதார செவிலியர்களை நியமனம் செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்த வேண்டும்.

கிராம சுகாதார செவிலியர்களுக்கு நிலை -1 பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு அந்த கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகேஸ்வரி ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாவட்ட துணைத் தலைவர் இந்திராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு முழக்கமிட்டனர்.

The post அரியலூர் அண்ணாசிலை அருகே கிராமங்களில் செவிலியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Ariyalur Annasilai ,Ariyalur ,Tamil Nadu Government Village, Area and Community Nurses Association ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் 49,548 வாக்காளர்கள் நீக்கம்