×

சைவ, வைணவ சமயங்கள் குறித்த பேச்சு கருத்து சுதந்திரத்தில் கூட நியாயமான கட்டுப்பாடுகள் உள்ளன: பொன்முடி வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: பெண்கள் குறித்தும் சைவ மற்றும் வைணவ சமயங்கள் குறித்தும் முன்னாள் அமைச்சர் பொன்முடி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். பொன்முடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, பொன்முடிக்கு எதிராக மூன்று காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார்கள் மீது விசாரணை நடத்தியதில், அவரது பேச்சு வெறுப்பு பேச்சு வரம்பில் வராது எனக் கூறி அந்த புகார்கள் முடித்து வைக்கப்பட்டன. அதன்பிறகு, தமிழகம் முழுவதும் 112 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

அவற்றின் மீது புலன் விசாரணை நிலுவையில் உள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியை தான் பொன்முடி குறிப்பிட்டு பேசினார் என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, முன்னாள் அமைச்சருக்கு எதிரான புகார்கள் மீது காவல் துறையினர், புலன் விசாரணை செய்ய தயங்கினால், விசாரணை சிபிஐக்கு மாற்றப்படும். பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்போது, அமைச்சராக பதவி வகித்தவர் ஏன் இதுபோல் பேச வேண்டும்?. அமைச்சராக இருந்தவர் என்ன சொல்கிறோம் என்பதை புரிந்து பேச வேண்டும். கருத்து சுதந்திரத்தில் கூட நியாயமான கட்டுப்பாடுகள் உள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த நல்ல விஷயங்களை சொல்லியிருக்கலாம் எனக் கூறி விசாரணையை ஜூலை 8ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post சைவ, வைணவ சமயங்கள் குறித்த பேச்சு கருத்து சுதந்திரத்தில் கூட நியாயமான கட்டுப்பாடுகள் உள்ளன: பொன்முடி வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து appeared first on Dinakaran.

Tags : Saiva ,High Court ,Ponmudi ,Chennai ,Former minister ,Justice ,P. Velmurugan.… ,Vaishnava ,Dinakaran ,
× RELATED இறுதி சடங்கு செலவுக்கு பணம்...