விருதுநகர்: விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு வாங்காமல் தூங்கி விழுந்த உதவி தேர்தல் அலுவலரால் பரபரப்பு ஏற்பட்டது.நகர்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் ஜன. 28 துவங்கி பிப். 4ல் (நாளை) நிறைவடைகிறது. விருதுநகர் நகராட்சி உதவித் தேர்தல் அலுவலராக நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டு இருந்தார். இவர் நேற்று காலை அலுவலகம் வந்தபோது, அலுவலகத்தில் வாந்தி எடுத்துள்ளார். வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது சேரில் உளறி கொண்டு தூங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்த அலுவலர்கள் மனுக்களை வாங்கி பரிசீலனை செய்தனர். வேட்பாளர்கள் வேட்புமனு செய்ய வந்த நேரம் சரியில்லையோ என நொந்து கொண்டனர். தகவல் அறிந்த நகராட்சி ஆணையர் முகம்மது முஸ்தபா கமால், உடனடியாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சேதுராமனை, உதவி தேர்தல் அலுவலராக நியமனம் செய்து வேட்புமனுக்கள் பெறப்பட்டன. தூங்கி, உளறி கொட்டிய ரவிச்சந்திரனை அலுவலர்கள் அழைத்து சென்று நகராட்சி அலுவலக மாடியில் படுக்க வைத்தனர். குடிப்பழக்கம் உள்ள ரவிச்சந்திரனிடம் இருந்து மது வாடை வந்ததால் குடித்து விட்டு வந்திருக்க வாய்ப்பு இருப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர். உடல்நிலை சரியில்லை என்றால், மாத்திரைகளை மாற்றி உட்கொண்டு இருந்தால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்க வேண்டும். அதை தவிர்த்து நகராட்சி அலுவலக மாடியில் படுக்க வைத்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இதுகுறித்து நகராட்சி ஆணையர் முகம்மது முஸ்தபா கமால் கூறுகையில், ‘`மாத்திரையை மாற்றி சாப்பிட்டுள்ளார். இதுவரை மயங்கிய நிலையில் பார்த்ததில்லை, இதுபற்றி கலெக்டர் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளோம். துணை வட்டார வளர்ச்சி அலுவலரை துணை தேர்தல் அலுவலராக நியமனம் செய்துள்ளோம். தேர்தல் முடியும் வரை தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டார்’’ என்றார். இதுதொடர்பாக, ரவிச்சந்திரனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது….
The post வேட்புமனு வாங்காமல் தூங்கி விழுந்த அதிகாரி: விருதுநகர் நகராட்சியில் பரபரப்பு appeared first on Dinakaran.