×

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மேலும் 9 ஆயிரம் பேரை டிஸ்மிஸ் செய்ய முடிவு

நியூயார்க்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மேலும் 9 ஆயிரம் ேபரை டிஸ்மிஸ் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 2024 ஜூன் மாத நிலவரப்படி உலகளவில் சுமார் 2, 28,000 ஊழியர்கள் பணியாற்றிவருகிறார்கள். தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் 9,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. இது 2வது பெரிய பணி நீக்க அறிவிப்பு ஆகும். கடந்த ஆண்டு மே மாதம் சுமார் 6 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்தது.

தற்போது மீண்டும் அதைவிட மிகப்பெரிய அளவில் பணி நீக்க அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தனது ஊழியர்களில் 4% அல்லது தோராயமாக 9,100 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளதாக சியாட்டில் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்த பணி நீக்கம் குறித்த ராய்ட்டர்ஸ் கேள்விகளுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் உடனடியாக பதிலளிக்கவில்லை.

The post மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மேலும் 9 ஆயிரம் பேரை டிஸ்மிஸ் செய்ய முடிவு appeared first on Dinakaran.

Tags : Microsoft ,New York ,Dinakaran ,
× RELATED ஆஸ்திரேலிய கடற்கரையில் யூதர்கள்...