×

ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு

சுல்தான்பூர்: கடந்த 2018ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது அப்போதைய பாஜ தலைவர் அமித் ஷாவுக்கு எதிராக ராகுல்காந்தி ஆட்சேபிக்கும் வகையில் பேசியதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலம், சுல்தான்பூரில் உள்ள நீதிமன்றத்தில் ராகுலுக்கு எதிராக பாஜவை சேர்ந்த விஜய் மிஸ்ரா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் சாட்சி ஆஜராகாததால் விசாரணையை வருகிற 14ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

The post ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Rahul ,Sultanpur ,Rahul Gandhi ,BJP ,Amit Shah ,Karnataka ,Sultanpur, Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED நிதித்துறை இணைஅமைச்சர் பதவி...