×

முருகன் மாநாடு – நயினார், அண்ணாமலை மீது வழக்கு

மதுரை : மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக நயினார், நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், சிரவை ஆதீனம், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தென்னிந்திய தலைவர் வன்னிய ராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.7 பேர் மீதும் 5 பிரிவுகளில் மதுரை அண்ணாநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவை மீறி, மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post முருகன் மாநாடு – நயினார், அண்ணாமலை மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Murugan Conference ,Nainar ,Annamalai ,Madurai ,Nagendran ,Murugan ,conference ,Munnani ,Kadeshwara Subramaniam ,Siravai Atheenam ,RSS ,Vanniya Rajan… ,Dinakaran ,
× RELATED கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில்...