×

மூதாட்டியிடம் நகை பறிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் பெரிய குப்பத்தை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி மகேஸ்வரி(62). நேற்று முன்தினம் அமாவாசையை முன்னிட்டு முனீஸ்வரன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் சாந்தி என்பவரை ஆட்டோவில் அழைத்துச்சென்றார். திருவள்ளூர் – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அரண்வாயில் அடுத்த புட்லூரில் உள்ள முனீஸ்வரன் கோயிலுக்கு சென்றார். இந்நிலையில், கோயிலில் அமாவாசை பூஜை நடந்து முடிந்ததும் கோயிலின் மீது நின்றுகொண்டு பக்தர்களுக்கு எலுமிச்சம் பழத்தை தூக்கி விசுவது வழக்கம். அந்த எலுமிச்சை பழத்தை ஆண் பக்தர்கள் கையிலும், பெண் பக்தர்கள் தங்களது புடவை முந்தானையிலும் பிடிப்பார்கள்.இந்த எலுமிச்சை பழத்தை பிடிப்பதற்காக கூட்டத்தில் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்படும். இதைப் பயன்படுத்தி மகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த ₹80 ஆயிரம் மதிப்புள்ள 2  சவரன் தங்க செயினை மர்ம நபர் பறித்துச் சென்றார். சிறிது நேரம் கழித்து கழுத்தில் தங்கச்செயின் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். புகாரின்படி செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்….

The post மூதாட்டியிடம் நகை பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Maheeswari ,Muniswaran ,Moon ,
× RELATED கடம்பத்தூர் அருகே வெண்மனம்புதூரில் ரயில்வே ஊழியருக்கு அரிவாள் வெட்டு!