×

மாணவி கூட்டு பலாத்காரம் கொல்கத்தா சட்டக்கல்லூரி காலவரையற்ற மூடல்

கொல்கத்த: கொல்கத்தாவின் கஸ்பாவில் உள்ள தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். ஜூன் 25 அன்று இரவு 7.30 மணி முதல் இரவு 10.50 மணி வரை கல்லூரி வளாகத்திற்குள் இந்த பாலியல் வன்கொடுமை நடந்ததாக காவல்துறை தெரிவித்தது. இதனையடுத்து, மனோஜித் மிஸ்ரா (30 வயது), பிரமித் முகர்ஜி (20 வயது), ஜைத் அகமது (19 வயது) ஆகியோர் இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர். மேலும் கல்லூரி காவலாளியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. சாட்சிகள் பரிசோதிக்கப்பட்டு அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் கைதான மனோஜித் மிஸ்ரா, பிரதிம் முகர்ஜி மற்றும் ஜைத் அகமது ஆகிய மூன்று பேரும் ஏற்கெனவே சில மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதும் தெரியவந்துள்ளதாக இந்த சம்பவத்தை விசாரிக்கும் 9 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. இந்த சூழலில் பா.ஜ மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதை தொடர்ந்து கொல்கத்தா சட்டக்கல்லூரி காலவரையற்ற வகையில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி நிர்வாகக் குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை கல்லூரி வளாகமும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மாணவி கூட்டு பலாத்காரம் கொல்கத்தா சட்டக்கல்லூரி காலவரையற்ற மூடல் appeared first on Dinakaran.

Tags : Kolkata Law College ,Kolkata ,South Kolkata Law College ,Kasba, Kolkata ,Dinakaran ,
× RELATED நேஷனல் ஹெரால்டு வழக்கில்...