×

ஏப்ரல் – டிசம்பர் காலத்தில் இந்தியன் ஆயில் நிறுவன வருவாய் ரூ.5.21 லட்சம் கோடி

சென்னை: இந்தியன், ஆயில் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.வைத்யா கூறியதாவது: இந்தியன்ஆயில் நிறுவனம் தங்கள் செயலாக்கங்களிலிருந்து ஏப்ரல் டிசம்பர் 2021 கால அளவில்  5 லட்சத்து 21 ஆயிரத்து 999 கோடி ரூபாய் வருவாயை பதிவு செய்துள்ளது. இதுவே, இதேகால அளவைக் கொண்ட கடந்த 2020-21 நிதியாண்டு காலத்தில் 3 லட்சத்து 51 ஆயிரத்து 147 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களின் நிகர இலாபம், முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் ₹13,055 கோடியாக இருந்தது. தற்போது ₹18,112 கோடி அளவில் உயர்ந்துள்ளது. இது நடப்பு காலகட்டத்தில் அதிக அளவிலான சுத்திகரிப்பு மற்றும் உயர் அளவிலான இன்வென்ட்டரி ஆகியவற்றின் விளைவால் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் – டிசம்பர் 2021 கால அளவில் இந்தியன் ஆயில் நிறுவனம், ஏற்றுமதி உள்ளிட்டதாக 30 மில்லியன் டன் தயாரிப்புகளை விற்றுள்ளது….

The post ஏப்ரல் – டிசம்பர் காலத்தில் இந்தியன் ஆயில் நிறுவன வருவாய் ரூ.5.21 லட்சம் கோடி appeared first on Dinakaran.

Tags : Indian Oil ,Chennai ,Indian Oil Company ,S.M. Vaidya ,IndianOil Company ,
× RELATED 2023-24 நிதி ஆண்டின் 4-வது காலாண்டில் ரூ.5,488...