×

நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்: ஜூலை 8ம் தேதி நெல்லை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தை ஒட்டி ஜூலை 8ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் தேர் திருவிழா வருடம் தோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திருவிழா வருகின்ற ஜூலை 8-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்தும் கலந்து கொள்கின்றனர்.

இதையொட்டி அன்றைய நாள் (ஜூலை 8) திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அன்றைய நாள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறையையொட்டி ஜூலை 8ம் தேதி மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் மட்டும் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளா்களுடன் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜூலை 19ஆம் தேதி வேலை நாளாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

The post நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்: ஜூலை 8ம் தேதி நெல்லை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nellaiappar Temple Chariot Festival ,Nellai ,Tirunelveli ,Tirunelveli Nellaiappar Temple Chariot Festival ,Nellaiappar Gandhimati Amman Temple Chariot Festival ,Tirunelveli district ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும்...