×

ரயில் கழிவறையில் வட மாநில வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

நாகர்கோவில்: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து கன்னியாகுமரிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு வந்தது. நேற்று அதிகாலை பராமரிப்பு பணிக்காக, நாகர்கோவிலில் உள்ள யார்டு பகுதிக்கு ரயில் கொண்டு செல்லப்பட்டது. அப்போது ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டி ஒன்றில் கழிவறை உள் பக்கமாக பூட்டி இருந்தது. கதவை தட்டியும் திறக்கவில்லை.

இதையத்து ரயில்வே போலீசார், ஊழியர்கள் உதவியுடன் கதவை உடைத்துப் பார்த்த போது கழிவறைக்குள் வாலிபர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது பேன்ட் பாக்கெட்டில் இருந்த ஆதார் கார்டு மூலம் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஜகர்லால் தாஸ் (38) என்பது தெரிய வந்தது. கேரளாவிற்கு மீன்பிடித் தொழிலுக்கு வந்தவர் ஏன் தற்கொலை செய்தார் என விசாரணை நடக்கிறது.

 

The post ரயில் கழிவறையில் வட மாநில வாலிபர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : northern state ,Nagercoil ,Pune, Maharashtra ,Kanyakumari ,
× RELATED மீண்டும் மீண்டும் பொய்யை...