×

கிணத்துக்கடவில் ரோட்டில் ஆறாக ஓடிய குடிநீர்

கிணத்துக்கடவு : குறிச்சி, குனியமுத்தூர் பகுதி மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய திட்டமாக குறிச்சி-குனியமுத்தூர் கூட்டுக்குடிநீர் திட்டம் உள்ளது. இந்நிலையில், கிணத்துக்கடவு பேரூராட்சி, வணிக வளாகம் முன்புள்ள இந்த திட்டத்தின் பிரதான குழாயில் நேற்று திடீரென உடைப்பு ஏற்பட்டது.

இதனால், பல லட்சம் லிட்டர் குடிநீர் கோவை பொள்ளாச்சி ரோட்டில் ஆறாக ஓடியது. இது குறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல் உடனடியாக குறிச்சி, குனியமுத்தூர் கூட்டுக்குடிநீர் திட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு கூறியதை தொடர்ந்து தண்ணீர் நிறுத்தப்பட்டது. மேலும், குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

The post கிணத்துக்கடவில் ரோட்டில் ஆறாக ஓடிய குடிநீர் appeared first on Dinakaran.

Tags : Kinathukadavil Road ,Kinathukadavu ,Kurichi ,Kuniyamuthur ,Town ,Panchayat and ,Complex ,Dinakaran ,
× RELATED 49வது புத்தகக்காட்சியை சென்னை...