×

திருச்சி மாநகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு

 

திருச்சி, ஜூன் 28: திருச்சி மாநகராட்சியின் ஆணையராக மதுபாலன் நேற்று பொறுப்பேற்றார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய மதுபாலன், திருச்சி மாநகராட்சி ஆணையராக பணி மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து அரசு உத்தரவின்படி திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மதுபாலன் ஆணையராக பொறுப்பேற்றார்.

மேலும் புதியதாக பொறுப்பேற்ற ஆணையர் திருச்சி மாநகர மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும் முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார். முன்னதாக மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் புதிதாக பொறுப்பேற்ற ஆணையரை சந்தித்து வாழ்த்து தொிவித்தனர்.

The post திருச்சி மாநகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : of Trichy ,Trichy ,Madhubalan ,Commissioner ,Municipality ,of ,Municipal Commissioner ,Thoothukudi ,Municipal Commissioner of ,Trichy Municipal Office ,Trichy Municipality ,Dinakaran ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...