- பொலிஸ் ஆணையாளர்
- மேற்கு மண்டல சைபர் குற்றக் காவல் குழு
- சென்னை
- ஆணையாளர்
- சென்னை பெருநகர போலீஸ்
- தேனாம்பேட்டை
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் , தேனாம்பேட்டை பகுதியில் போலி கால் சென்டர் நடத்திய 2 நபர்களை பிடித்த மேற்குமண்டல சைபர் கிரைம் காவல்குழுவினர் மற்றும் 4வது மாடியில் இருந்து கீழே குதிக்க முயன்ற பெண்ணை காப்பாற்றிய பெண் உதவி ஆய்வாளர் ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
1. மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலைய காவல் குழுவினர் தேனாம்பேட்டை பகுதியில் போலி காலி சென்டர் நடத்திய 2 நபர்களை பிடித்து மத்திய குற்றப்பிரிவில் ஒப்படைத்தனர். ராமநாதன், வ/65, அரும்பாக்கம் என்பவருக்கு கடந்த 29.04.2025 முதல் 13.06.2025 வரை அலைபேசியில் தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர் PNB Metlife Policy -யை Close செய்வதற்கு உதவுவதாக கூறியுள்ளனர். மேலும் அந்த நபர் தொடர்ந்து மனுதாரரை தொடர்பு கொண்டு ரூ.18,64.204/- ரூபாயை பல்வேறு காப்பீடு நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலம் பாலிசி தொகை ரூ.4,20,00,000/ ரூபாயை Withdrawal செய்யலாம் என்று கூறியுள்ளனர்.
மனுதாரர் இதனை நம்பி மொத்தமாக 17 பாலிசிகள் எடுத்துள்ளார். ஆனால் மனுதாரருக்கு எந்த விதமான பாலிசி சம்மந்தமான ஆவணங்களோ அல்லது பணமோ திரும்ப அளிக்கபடவில்லை. இது குறித்து ராமநாதன், மேற்கு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்தபுகாரின்பேரில், காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, சென்னையில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனங்களில் விசாரித்த போது அவரின் பெயரில் எந்தவிதமான பாலிசியும் பெறபடவில்லை என்பதும், மேற்படி புகார்தாரருக்கு வந்த அலைபேசி 9445201498 என்ற எண்ணானது ஆயிரம் விளக்கு பகுதியை சார்ந்தது என்பதும் தெரியவந்ததின்பேரில், காவல்குழுவினர் விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 25.06.2025 அன்று மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளரிடம் 9445918905 என்ற தொலைபேசி எண்ணிலிருந்து பேசிய ஒரு பெண் தன்னுடைய பெயர் நந்தினி என்றும், தாம்பரம் மேற்கு, அப்போலோ மருத்துவமனை அருகில் உள்ள HDFC வங்கியிலிருந்து பேசுவதாக கூறி, தாங்கள் 2018ஆம் ஆண்டு எடுத்த பாலிசியின் முதிர்வு தொகை ரூ.2,85,000/ காலவதியாகிவிட்டதாகவும், பின்பு தான் ஒரு லிங்கை அனுப்புவதாகவும் அதன் லிங் மூலம் ரூ.15,000/ + GST தொகையை செலுத்துமாறும், பின்னர் அதே லிங்கில் ஆதார் கார்டு, பேன் கார்டு, பேங்க் பாஸ்புக் மற்றும் புகைப்படத்தையும் பகிருமாறு கூறினார். அவர் கூறியது போன்று எந்த விதமான பாலிசியும் இல்லாத காரணத்தினால், முறைப்படி அந்த தொலைபேசி எண்ணை Track செய்து பார்த்தப்போது அந்த எண்ணானது தேனாம்பேட்டை, ரங்கூன் தெருவில் உள்ள JVL Plasa என்ற முகவரியில் இருந்து வந்தது தெரியவந்தது.
அதன்பேரில் உயர் அதிகாரியிடம் அனுமதி பெற்று சைபர் கிரைம் காவல் குழுவினருடன் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது முதல் மாடியில் நிறுவன பெயர் பலகை ஏதும் இன்றி 50 ஊழியர்களுடன் முன்னீர் உசேன் என்பவர் தலைமையில் இயங்கும் ஒரு அலுவலகத்தை கண்டு, விசாரணை செய்த போது, அது போலியான கால் சென்டர் என்பதும், ஏற்கனவே முன்னீர் உசேன் என்பவர் ஏற்கனவே 2020ஆம் ஆண்டு இதே போன்று ஒரு குற்றத்திற்காக CCB-யில் வழக்கு பதிவு செய்து, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்படி சிறையில் அடைக்கப்பட்டதும் தெரியவந்தததின் பேரில் இவ்வழக்கு CCB க்கு மாற்றம் செய்யப்பட்டது கால் சென்டர் உரிமையார் முன்னீர் உசேன், மற்றும் மேலாளர் அசோகன் ஆகிய இருவரும் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தலின் படி மத்தியகுற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
2. மாம்பலம் பகுதியில் 4வது மாடியில் இருந்து கீழே குதிக்க முயன்ற பெண்ணை சாதூர்யமாக பேசி காப்பாற்றிய பெண் உதவி ஆய்வாளர்: R-1 மாம்பலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தி.நகர், நானா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 4வது மாடியில் வசித்து வரும் டெவினா, பெ/27 என்பவர் கடந்த 23.06.2025 அன்று மாலை, அவரது வீட்டின் படுக்கை அறையை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு படுக்கையறை ஜன்னல் வழியாக உட்கார்ந்து கொண்டு கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டுவதாக கிடைத்த தகவலின்பேரில், காவல்குழுவினர் விரைந்து சென்றபோது, அங்கு பணிலிருந்த பெண் உதவி ஆய்வாளர் மீரா உடனடியாக 4வது மாடியிலுள்ள டெவினாவின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரிடம் டெவினாவின் செல்போனை கேட்டு டெவினாவை செல்போனில் தொடர்பு கொண்டு சாதுர்யமாக பேசிக் கொண்டே கதவை உடைத்து உள்ளே நுழைந்து, ஜன்னலோரம் அமர்ந்து கொண்டு குதிக்க முயன்ற டெவினாவை பிடித்து, தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் வீட்டிற்குள் இழுத்து காப்பாற்றினார்.
தேனாம்பேட்டை பகுதியில் போலி கால் சென்டர் நடத்திய நபர்களை கைது செய்த மேற்குமண்டல சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் சாந்திதேவி, சிறப்பு உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், முதல்நிலைக்காவலர்கள் வெங்கடேசன், (மு.நி.கா.46220) புண்ணியரசன், (மு.நி.கா.64115) காவலர்கள் தட்சிணாமூர்த்தி, (கா.50965), மைனர்பாண்டி (கா.63384) மற்றும் தக்க சமயத்தில் விரைந்து செயல்பட்டு, சாதுர்யமாக பெண்ணிடம் பேசி தற்கொலை முயன்ற பெண்ணை காப்பாற்றிய R-4 சௌந்திரபாண்டியனார் அங்காடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் P.மீரா ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இன்று (27.06.2025) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
The post மேற்குமண்டல சைபர் கிரைம் காவல்குழுவினர் மற்றும் பெண் உதவி ஆய்வாளர் ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டினார் காவல் ஆணையாளர் appeared first on Dinakaran.
