×

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் 4வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா

துபாய்: இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடர் 4வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு (2025-2027) உட்பட்டது என்பதால் இந்த போட்டி முடிந்ததும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கான புள்ளி பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. முதல் போட்டியை இந்தியாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியுள்ள இங்கிலாந்து 100 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளது. 2வது மற்றும் 3வது இடங்களில் முறையே தலா 33.33 சதவீத புள்ளிகளுடன் வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகள் உள்ளன.

தோல்வி கண்ட இந்தியா இன்னும் புள்ளிக்கணக்கை தொடங்காமல் 4-வது இடத்தில் உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளான நியூசிலாந்து, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் தென் ஆப்பிரிக்கா ஆகியவை இன்னும் இந்த சுழற்சியில் போட்டிகளில் ஆடவில்லை. இதனால் அந்த அணிகளுக்கு புள்ளிகள் எதுவும் குறிப்பிடவில்லை. ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடரின் 3 போட்டிகளில் முதல் போட்டி தற்போது நடந்து வருகிறது. அது முடிவடைந்ததும் இந்த பட்டியல் மாறும்.

 

The post உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் 4வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா appeared first on Dinakaran.

Tags : India ,World Test Championship ,Dubai ,cricket ,England ,World Test Championship… ,Dinakaran ,
× RELATED தேசிய துப்பாக்கி சுடுதல்: அங்குஷ் ஜாதவுக்கு தங்கப் பதக்கம்