சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர், வேப்பேரி பகுதியில் போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையில் சிறப்பாக பணிபுரிந்து சுமார் 108.8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சீரிய பணியாற்றிய கீழ்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் தலைமையிலான குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
கீழ்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் J.ஜரீனாபேகம் தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வேப்பேரி சரக உதவி ஆணையாளர், G-1 வேப்பேரி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் தனிப்படை காவல் குழுவினர் ஒருங்கிணைந்து கடந்த 02.06.2025 அன்று வேப்பேரி, ஜெனரல் காலின்ஸ் ரோடு , செங்கல்வராயன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோ மற்றும் ஹீரோ ஹோண்டா இருசக்கர வாகனத்திலிருந்த மூன்று நபர்களை விசாரித்து அவர்கள் வாகனத்தில் வைத்திருந்த 2 பெரிய வெள்ளை நிற மூட்டைகளை சோதனை செய்தபோது அதில் முழுவதுமாக கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
அதன்பேரில் கஞ்சா கடத்தி வந்த 1.பண்டாரு நகேஷ்வர ராவ், 2.கஜபதி, 3.தினேஷ், மற்றும் 4.ரேவதி ஆகியோரை தனிப்படையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். அவர்களிடமிருந்து 108.8 கிலோ கஞ்சா மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 ஆட்டோ மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்செய்யப்பட்டது.
சிறப்பாக பணி செய்து செய்து கஞ்சா கடத்தி வந்த குற்றவாளிகளை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்த கீழ்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் J.ஜரீனா பேகம், வேப்பேரி சரக உதவி ஆணையாளர் R.கண்ணன், G-1 வேப்பேரி காவல் நிலைய ஆய்வாளர் N.திருமால், தலைமைக்காவலர்கள்R.சரவணகுமார் (த.கா.262860), N.பிரதீப் (27023), முதல் நிலைக்காவலர் A.புருஷோத்தமன், (மு.நி.கா.50826),காவலர் K.கருப்பையா (கா.63763) ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இன்று (25.06.2025) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
The post போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை நேரில் அழைத்து பாராட்டினார் காவல் ஆணையாளர் appeared first on Dinakaran.
