×

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் புகழைப் போற்றுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமுக வலைதளப் பதிவு

சென்னை: ஆதிக்க இருள் அகற்றிட, சமூகநீதி எனும் போரொளியைத் தூக்கிச் சுமந்த விடிவெள்ளி வி.பி.சிங் என வி.பி.சிங் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமுக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

முதல்வரின் சமுக வலைதள பதிவில்:
இந்திய நிலப்பரப்பில் மண்டிக்கிடந்த ஆதிக்க இருள் அகற்றிட, சமூகநீதி எனும் பேரொளியைத் தூக்கிச் சுமந்த விடிவெள்ளி ‘சமூகநீதிக் காவலர்’ வி.பி.சிங் அவர்களின் புகழை நாளும் போற்றுவோம்! ஆதிக்கத்துக்கு எதிரான போராட்ட வரலாற்றைத் திரிபுகளால் மாற்றுவது மீண்டும் அடிமைத்தனத்துக்கே வழியமைக்கும் முயற்சி என்பதை இளம் தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம் என கூறியுள்ளார்.

The post சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் புகழைப் போற்றுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமுக வலைதளப் பதிவு appeared first on Dinakaran.

Tags : Social Justice Guard ,Singh ,Chief Minister ,MLA K. Stalin ,CHENNAI ,VIDIVALI ,B. Singh ,V. B. ,K. Stalin ,
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு...