×

ஜார்க்கண்ட் மாஜி முதல்வர் ஷிபு சோரன் மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஷிபு சோரன்(81) ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவராக கடந்த 38 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள ஷிபு சோரன் கடந்த 3 தினங்களாக டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

The post ஜார்க்கண்ட் மாஜி முதல்வர் ஷிபு சோரன் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Former ,Jharkhand ,Chief Minister ,Shibu Soren ,New Delhi ,Jharkhand Mukti Morcha ,
× RELATED ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி பிறந்த...