×

தயாரிப்பாளர் சங்கம், பெப்சி இடையே அரசு தரப்பில் பேச்சுவார்த்தை

சென்னை: பெப்சி தொழிலாளர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களுக்கு இடையே சம்பளப் பிரச்னை தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில், செய்தித்துறை மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முன்னிலையில் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பெப்சி தொழிலாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இடையே சம்பளப் பிரச்னை தொடர்பாக கருத்து வேறுபாடுகள் இருந்ததால், இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இது, அடுத்த வாரமும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் சங்கம் மற்றும் பெப்சி தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது.

 

The post தயாரிப்பாளர் சங்கம், பெப்சி இடையே அரசு தரப்பில் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Producers' Council ,Pepsi ,Chennai ,Film Producers' Council ,Minister ,M.P. Saminathan… ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!