*பொதுமக்கள் பாராட்டு
கடையம் : கடையத்தில் விளையாட்டு மைதானத்தில் கண்டெடுத்த ரூ.100ஐ காவல்நிலையத்தில் ஒப்படைத்த சிறுவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.கடையம் கருப்பசாமி கோயில் தெருவைச் சேர்ந்த தர்மர் மகன் அபிமன்யு மற்றும் கருப்பசாமி மகன் பாலாஜி ஆகியோர் நேற்று விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது ரூ.100 மைதானத்தில் கிடந்தது. இதையடுத்து அபிமன்யு மற்றும் பாலாஜி ஆகியோர் கடையம் காவல் நிலையத்திற்குச் சென்று இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமாரிடம் ஒப்படைத்தனர்.
இருவரையும் பாராட்டிய இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் இருவருக்கும் தலா ரூ.100 அன்பளிப்பாக வழங்கினார். மேலும் போலீஸ் நிலையத்தில் இருந்த காவலர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.
இதுகுறித்து சிறுவர்கள் கூறுகையில், ‘வியாழக்கிழமை பள்ளியில் உரையாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் உமா பொது இடங்களில் கண்டெடுக்கும் பொருட்கள் மற்றும் பணத்தை உடனடியாக காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார். எனவே விளையாட்டு மைதானத்தில் கண்டெடுத்த ரூ.100ஐ காவல்நிலையத்தில் ஒப்படைத்தோம்’ என்றனர்.
The post விளையாட்டு மைதானத்தில் கண்டெடுத்த ரூ.100ஐ போலீசில் ஒப்படைத்த சிறுவர்கள் appeared first on Dinakaran.
