×

குழித்துறை அருகே பஸ்சுக்காக காத்திருந்த 2 குழந்தைகளின் தாயை காரில் கடத்தி சென்று பலாத்காரம்: பள்ளி நண்பர் வெறிச்செயல்; தட்டிக்கேட்டதால் சரமாரி தாக்குதல்


மார்த்தாண்டம்: கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே பஸ்சுக்காக காத்திருந்த 2 குழந்தைகளின் தாயை காரில் கடத்தி சென்று பலாத்காரம் செய்த பள்ளி நண்பர் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தட்டிக்கேட்ட பெண்ணை சரமாரி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்தவர் ரேவதி (36 பெயர் மாற்றம்). பிளஸ் 2 வரை படித்துள்ளார். அதே பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலைபார்த்து வருகிறார். அவருக்கு திருமணமாகி கணவர், 2 பிள்ளைகள் உள்ளனர். அவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் ராபர்ட் ஜான் (36 பெயர் மாற்றம்). அவருக்கு திருமணமாகி மனைவி, பிள்ளைகள் உள்ளனர். ராபர்ட் ஜானும், ரேவதியும் பள்ளிக்கூடத்தில் ஒன்றாக படித்தபோது நட்புடன் பழகியுள்ளனர். இந்த பழக்கம் திருமணமான பிறகும் தொடர்ந்தது.

இந்தநிலையில் ரேவதி கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி மதுரையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். இரவு சுமார் 9.30 மணியளவில் குழித்துறை ஜங்சன் பகுதிக்கு வந்திறங்கினார். பின்னர் தனது வீட்டுக்கு செல்வதற்காக குழித்துறை பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்துக்கொண்டிருந்தார். அப்போது ராபர்ட் ஜான் தனக்கு சொந்தமான காரில் அந்த வழியாக வந்தார். பஸ் நிறுத்தத்தில் ரேவதி நிற்பதை பார்த்த உடனே காரை ஓரமாக நிறுத்தினார். தொடர்ந்து உன்னை வீட்டில் விடுகிறேன் என்று கூறினார். இதை நம்பிய ரேவதி நண்பன் தானே கூப்பிடுகிறான் என்று நினைத்து காரில் ஏறியுள்ளார். சிறிது தூரம் சென்றவுடன் ரேவதி வீட்டுக்கு செல்லும் வழியை தவிர்த்து, ராபர்ட் ஜான் தனது வீட்டுக்கு செல்லும் வழியில் காரை ஓட்டி சென்றார். இதனால் எரிச்சலடைந்த ரேவதி, டேய்… எனக்கு நேரமாகிவிட்டது…

எனது வீட்டுக்கு அழைத்து செல்லாமல் எங்கே காரை ஓட்டி செல்கிறாய்? என கேட்டார். அப்போது பேசிய ராபர்ட் ஜான், இவ்வளவு தூரம் வந்துட்ட… என் வீட்டுக்கு வா… எனது மனைவி, பிள்ளைகளை பார்த்துவிட்டு உன்னை உனது வீட்டில் கொண்டுபோய் விடுகிறேன் என்றார். இதனை நம்பிய ரேவதி சம்மதித்தார். இதையடுத்து ராபர்ட் ஜான் வீடு வந்துவிட்டதால் காரில் இருந்து இருவரும் இறங்கினர். அவசர அவசரமாக ரேவதியை அழைத்து சென்ற ராபர்ட் ஜான், கதவை திறந்து சட்டென ரேவதியின் கையை பிடித்து இழுத்து வீட்டின் உள்ளே தள்ளினார். இதை சற்றும் எதிர்பாராத ரேவதி அதிர்ச்சியில் உறைந்தார். எதற்காக இப்படி தள்ளுகிறாய்? உன் மனைவி, பிள்ளைகள் எங்கே என கேட்டார்.
இங்கே யாருமில்லை… என்னிடம் வசமாக மாட்டிக்கொண்டாய் என சத்தமாக சிரித்த ராபர்ட் ஜான், ரேவதியின் கழுத்தை நெரித்து, வாயை பொத்தி படுக்கையறைக்கு கொண்டு சென்றார்.

அங்கு கட்டிலில் ரேவதியை தள்ளிவிட்டு அவரது ஆடைகளை வெறித்தனமாக கழற்றி எறிந்தார். ரேவதி எவ்வளவோ போராடியும் முடியவில்லை. இதையடுத்து ரேவதியை பலவந்தமாக ராபர்ட் ஜான் பலாத்காரம் செய்தார். கடுமையாக போராடியதால் சோர்வடைந்த ரேவதி இறுதியில் ராபர்ட் ஜானின் இச்சைக்கு இரையானார். இதையடுத்து கதறி அழுத ரேவதியிடம் இதுகுறித்து யாரிடமாவது கூறினால் உன்னையும், உனது பிள்ளைகளையும் கொன்றுவிடுவதாக மிரட்டினார். பின்னர் வலுக்கட்டாயமாக மீண்டும் காரில் ஏற்றி சென்று ரேவதியின் வீடு அருகே இறக்கிவிட்டு சென்றுவிட்டார். இந்த சம்பவத்தால் மன உளைச்சலில் இருந்த ரேவதியால் சரியாக தூங்க முடியவில்லை, யாரிடமும் பேசாமல் இருந்தார். இதுகுறித்து ஒருதடவை கணவர் கேட்டபோது, நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதார். இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் உடனே இதுகுறித்து ராபர்ட் ஜானின் மனைவியிடம் சொல்லிவிடு என்றார்.

இதன்படி ரேவதி நேற்று முன்தினம் காலையில் ராபர்ட் ஜானின் வீட்டுக்கு சென்றார். அங்கு ராபர்ட் ஜான், அவரது மனைவி, சகோதரி மற்றும் தாயார் இருந்தனர். அவர்களிடம் ரேவதி நடந்த விபரத்தை கூறி கதறினார். ஆனால் இதனை ஏற்க மறுத்த ராபர்ட் ஜானின் சகோதரி திடீரென செருப்பை எடுத்து ரேவதியை அடித்தார். இதையடுத்து ராபர்ட் ஜான் அங்கு வந்து ரேவதியை சரமாரி தாக்கி கீழே தள்ளியதோடு வயிற்றில் மிதித்துள்ளார். இதில் காயமடைந்த ரேவதி அங்கிருந்து அழுதவாறு தப்பி வந்துவிட்டார். இதையடுத்து ரேவதி குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தன்னை தாக்கிய ராபர்ட் ஜான், அவரது அக்கா ஆகியோர் மீது மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரேவதி புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி நண்பனே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post குழித்துறை அருகே பஸ்சுக்காக காத்திருந்த 2 குழந்தைகளின் தாயை காரில் கடத்தி சென்று பலாத்காரம்: பள்ளி நண்பர் வெறிச்செயல்; தட்டிக்கேட்டதால் சரமாரி தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : MARTHANDAM ,KANYAKUMARI DISTRICT CAVE ,Kanyakumari District ,Dinakaran ,
× RELATED தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு – மூவர் கைது