×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பழவேற்காடு மீனவர்கள் போராட்டம்

பொன்னேரி: காட்டுப்பள்ளியில் எல்என்டி கப்பல் கட்டும் தளம், அதானி துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. கடந்த 2008ம் ஆண்டு இங்கு தொழிற்சாலைகள் அமைப்பதால் வாழ்வாதாரம் பாதிப்பதாக மீனவர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து 1750 மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டு முதற்கட்டமாக 250 பேருக்கு வேலை வழங்கி கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், வேலைவாய்ப்பு நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பழவேற்காடு, லைட்ஹவுஸ், தாங்கல் பெரும்பலம், கோட்டைக்குப்பம் ஆகிய 4 ஊராட்சிகளை சேர்ந்த மீனவர்கள் ஒட்டுமொத்தமாக மீன்பிடி தொழிலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு செல்ல தயாரான பழவேற்காடு மீனவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக திருவள்ளூர் மாவட்ட போலீசார் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் பழவேற்காட்டில் ஆங்காங்கே தடுப்பு வேலிகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் மீனவர்கள் படகுகள் மூலம் போராட்டக் களத்திற்கு செல்ல தயாரான நிலையில் சாலை மார்க்கமாகவே போராட்டக் களத்திற்கு செல்ல போலீசார் அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து காட்டுப்பள்ளியில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட பழவேற்காடு மீனவ கூட்டமைப்பை சேர்ந்தோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். எஞ்சிய 1500 பேருக்கும் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. தகவலறிந்த கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், துரை சந்திரசேகர் எம்எல்ஏ, மீஞ்சூர் ஒன்றிக்குழு தலைவர் ரவி, ஒன்றிய செயலாளர் ரமேஷ் ராஜ், கம்பெனி நிர்வாகிகள், மீனவ கிராம நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி 1 வாரத்திற்குள் பணி நிரந்தரம், சம்பள உயர்வு, வேலை வாய்ப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருவதாக முடிவெடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து, காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்த போராட்டம் கைவிடப்பட்டது….

The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பழவேற்காடு மீனவர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Palavekadu ,Ponneri ,Kattupalli ,LND Shipyard ,Adani Port ,Palavekadu Fishermen ,Dinakaran ,
× RELATED பழவேற்காடு அரசு மருத்துவமனையில்...