×

ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாகிறது மகேஷ்பாபு-ராஜமவுலி படத்தின் அறிவிப்பு

பாகுபலி, பாகுபலி- 2, ஆர்ஆர்ஆர் படங்களைத் தொடர்ந்து மகேஷ்பாபு நடிப்பில் தனது அடுத்த படத்தை இயக்கப் போகிறார் ராஜமவுலி. இந்த படத்திற்கும் அவரது தந்தையான விஜயேந்திர பிரசாத்தே கதை எழுதியுள்ளார். கீரவாணி இசையமைக்கிறார். தென் ஆப்பிரிக்கா காடுகளில் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நடைபெற உள்ளது. ஆக்ஷன் அட்வென்சர் பாணியில் உருவாகும் இந்த படத்தில் ஏராளமான மிருகங்களும் இடம் பெறுகின்றன.

இந்த படத்தில் ஹிந்தி நடிகர் அமீர்கான் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் நடைபெற உள்ள நிலையில், 2025ம் ஆண்டு இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் ராஜமவுலி. மகேஷ்பாபுவின் 29வது படமான இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அவரது பிறந்தநாளான ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாக இருப்பதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.

The post ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாகிறது மகேஷ்பாபு-ராஜமவுலி படத்தின் அறிவிப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Baahubali ,2 ,RRR ,Rajamouli ,Mahesh Babu ,Vijayendra Prasathe ,Keeravani ,South Africa ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ரசிகரின் குடும்பத்துக்கு சர்ப்பிரைஸ்...