×

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் வெடித்துச் சிதறியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ஸ்டார்ஷிப் 36 ராக்கெட்..!!

வாஷிங்டன்: அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் வெடித்துச் சிதறியுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் என்பது, இதுவரை கட்டப்பட்டவற்றில் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த ராக்கெட்டாகும். இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று, மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு கொண்டு செல்வதாகும். இது இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. சூப்பர் ஹெவி எனப்படும் முதல் நிலை ராக்கெட் பூஸ்டர் மற்றும் ஸ்டார்ஷிப் எனப்படும் மேல்-நிலை விண்கலம். இது முழுமையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது 100 டன்களுக்கு மேல் சுமையை சுமந்து செல்லும் திறன் கொண்டது. ஸ்டார்ஷிப் ராக்கெட்டை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பலமுறை சோதனை விமானங்களுக்கு உட்படுத்தியுள்ளது. சில சோதனைகளில் வெற்றி பெற்றாலும், சில சோதனைகளில் தோல்விகளும் ஏற்பட்டுள்ளன. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க், ஸ்டார்ஷிப் திட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் டெக்சாஸ் மாகாணத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் விண்ணில் ஏவுவதற்கு முன்பு சோதனை கட்டத்திலேயே வெடித்துச் சிதறியது. டெக்சாஸில் சோதனையின்போது ராக்கெட் வெடித்துச் சிதறி பெரும் தீப்பிழம்பு உருவானது.

The post அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் வெடித்துச் சிதறியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ஸ்டார்ஷிப் 36 ராக்கெட்..!! appeared first on Dinakaran.

Tags : US state of Texas ,Washington ,US state of ,Texas ,SpaceX ,Mars ,
× RELATED அன்புமணி மீதான ஊழல் வழக்கை சிபிஐ...