- சென்னை
- வர்த்தக செயலாளர்
- பதிவாளர்
- கக்கர்லா உஷா
- துணை ஆணையாளர்
- கிருஷ்ணகிரி செல்வகணபதி ராணிப்பேட்டை
- ஆணையாளர்
- கங்காஸ்ரீ வி.மதன்குமார் சேலம்
- ஈரோடு உளவுத்துறை
- தின மலர்
சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் காகர்லா உஷா பிறப்பித்த உத்தரவு: கிருஷ்ணகிரி துணை ஆணையர் செல்வகணபதி ராணிப்பேட்டைதுணை ஆணையராகவும், ஆணையர் அலுவலக உளவுப்பிரிவு துணை ஆணையர் கங்காஸ்ரீ வடச்சென்னை-2 துணை ஆணையராகவும், ஈரோடு உளவுப்பிரிவு துணை ஆணையர் மதன்குமார் சேலம் மற்றும் ஈரோடு ஜிஎஸ்டி மேல்முறையீட்டு துணை ஆணையராகவும், ஆணையர் அலுவலக உளவுப்பிரிவு துணை ஆணையர் ஜெயா செங்கல்பட்டு-2 உளவுப்பிரிவு துணை ஆணையராகவும், அதிக வரி செலுத்துவோர் அலகு, சென்னை துணை ஆணையர் சத்யா கடலூர் துணை ஆணையராகவும், ஈரோடு துணை ஆணையர் ரேனு கமல் அதிக வரி செலுத்துவோர் அலகு, சென்னை துணை ஆணையராகவும், செங்கல்பட்டு துணை ஆணையர் லீனா சென்னை-1 ஜிஎஸ்டி மேல்முறையீட்டு துணை ஆணையராகவும், தஞ்சாவூர்(திருவாரூர் பிரிவு) துணை ஆணையர் மீனாட்சி செங்கல்பட்டு துணை ஆணையராகவும், திருச்சி சட்டப்பிரிவு துணை ஆணையர் முத்துக்குமார் தஞ்சாவூர்(திருவாரூர் பிரிவு) துணை ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல திருச்சி உளவுப்பிரிவு துணை ஆணையர் பழனிவேலன் திருச்சி சட்டப்பிரிவு துணை ஆணையராகவும், வேலூர் மேல்முறையீட்டு துணை ஆணையர் கயல்விழி திருச்சி உளவுப்பிரிவு துணை ஆணையராகவும், கோவை உளவுப்பிரிவு துணை ஆணையர் சசிகுமார் சென்னை உளவுப்பிரிவு(ஆய்வுகள்) துணை ஆணையராகவும், ஓசூர் உளவுப்பிரிவு துணை ஆணையர் நரேஷ் குமார் வியாஸ் கோவை உளவுப்பிரிவு துணை ஆணையராகவும், ஓசூர் சட்டப்பிரிவு துணை ஆணையர் மூர்த்தி ஓசூர் உளவுப்பிரிவு துணை ஆணையராகவும், செங்கல்பட்டு சட்டப்பிரிவு துணை ஆணையர் மோகேஷ் குமரன் சென்னை மேல்முறையீட்டு துணை ஆணையராகவும், மதுரை கூடுதல் மாநில பிரிதிநியாக உள்ள துணை ஆணையர் திருமலை ராஜ்சந்தர் வட சென்னை சட்டப்பிரிவு துணை ஆணையராகவும், சென்னை உளவுப்பிரிவு-1(ஆய்வுகள்) துணை ஆணையர் ராம்மோகன் ஆணையர் அலுவலக கொள்கை மற்றும் திட்டமிடல் துணை ஆணையராகவும், கொள்கை மற்றும் திட்டமிடல் துணை ஆணையராக உள்ள பிரபு ஒருங்கிணைப்பு துணை ஆணையராகவும், ஆணையர் அலுவலக மதிப்பாய்வு மற்றும் மேல்முறையீட்டு துணை ஆணையர் செல்வம் சென்னை-2 மேல்முறையீட்டு துணை ஆணையராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
The post 20 வணிகவரி துணை ஆணையர்கள் பணியிட மாற்றம்: அரசு உத்தரவு appeared first on Dinakaran.
