திருவனந்தபுரம்: கேரளாவில் பெட்ரோல் பங்குகளில் உள்ள கழிப்பறைகளை பொது கழிப்பறைகளாக பயன்படுத்தலாம் என்று கேரள அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு கேரள பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கேரள அரசின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி டயஸ் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பெட்ரோல் பங்குகளில் உள்ள கழிப்பறைகள் ஆபத்தான பகுதி என்பதால் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அது மேலும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார். இதை ஏற்றுக் கொண்ட டிவிஷன் பெஞ்ச், பெட்ரோல் பங்குகளில் உள்ள கழிப்பறைகளை பொது கழிப்பறைகளாக பயன்படுத்த தடை உத்தரவு பிறப்பித்தது.
The post கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பெட்ரோல் பங்குகளில் உள்ளவை பொது கழிப்பறைகள் அல்ல appeared first on Dinakaran.
