×

மாணவர்கள் போராட்ட வழக்கில் ராஜஸ்தான் காங். எம்எல்ஏக்கள் 2 பேருக்கு ஓராண்டு சிறை

ஜெய்ப்பூர்: கடந்த 2014ம் ஆண்டு ராஜஸ்தான் பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவர் சங்க தலைவர்களான முகேஷ் பாக்கர்,மனிஷ் யாதவ் ஆகியோர் தலைமையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பல்கலைகழகத்தின் நுழைவாயிலை மறித்து 20 நிமிடங்கள் மறியலில் ஈடுபட்டதாக முகேஷ் மற்றும் மனிஷ் உள்ளிட்ட 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு ஜெய்ப்பூரில் உள்ள கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 11 வருடங்களாக நடந்து வந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி பரிஷிக்தா தேத்தா,‘‘ முகேஷ் பாக்கர்,மனிஷ் யாதவ் உட்பட 9 பேரை குற்றவாளிகள். அவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் தலா ரூ.3,200 அபராதம் விதிக்கப்படுகிறது’’ என்றார். சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகேஷ் பாக்கர், மனிஷ் யாதவ் ஆகியோர் தற்போது காங்கிரஸ் எம்எல்ஏக்களாக உள்ளனர்.

The post மாணவர்கள் போராட்ட வழக்கில் ராஜஸ்தான் காங். எம்எல்ஏக்கள் 2 பேருக்கு ஓராண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Rajasthan Congress ,Jaipur ,Rajasthan University ,Mukesh Bhaker ,Manish Yadav ,Mukesh ,Manish ,
× RELATED ஒன்றிய அமைச்சர் கட்கரியுடன்...