×

வாக்காளர் அடையாள அட்டை 15 நாட்களில் வழங்கப்படும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் இனி 15 நாட்களில் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வாக்காளர்களுக்கும் சேவை வழங்கலை விரைவாவும், எளிதாகவும் அணுகக்கூடிய வகையில் மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் 15 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,‘‘ புதிய நடைமுறை மூலம் புதிய அடையாள அட்டை உருவாக்கம் முதல் விநியோகம் வரை நிகழ்நேர கண்காணிப்புடன் சேவை வழங்கலை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.அடையாள அட்டையின் ஒவ்வொரு கட்டத்திலும் வாக்காளர் அடையாள அட்டையின் நிலை குறித்து வாக்காளர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும்’’ என்றனர்.

The post வாக்காளர் அடையாள அட்டை 15 நாட்களில் வழங்கப்படும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Election Commission ,New Delhi ,Chief Election Commissioner ,Nhanesh Kumar ,Dinakaran ,
× RELATED நேஷனல் ஹெரால்டு வழக்கில்...