×

உதவி பொருள்களை வாங்க காத்திருந்த 51 பாலஸ்தீனர்களை சுட்டு கொன்ற இஸ்ரேல்

கான் யூனிஸ்: காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் முதல் போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஹமாஸ் படையினருக்கு உதவி செய்யும் ஈரான் மீதும் இஸ்ரேல் பயங்கர தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. நீடிக்கும் போரில் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கு உதவுவதற்காக காசாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த மாதம் அமெரிக்காவின் உதவியுடன் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த உதவி மையம் மூலம் பாலஸ்தீனர்களுக்கு உணவு உள்ளிட்ட பல்வேறு உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கான் யூனிஸ் பகுதியில் உள்ள உதவி மையத்தில் நேற்று உணவு உள்ளிட்ட பொருள்களை வாங்குவதற்காக மக்கள் காத்து கொண்டிருந்தனர். அப்போது இஸ்ரேல் நடத்திய துப்பாக்கி சூட்டில் 51 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் படுகாயமடைந்தனர்.

The post உதவி பொருள்களை வாங்க காத்திருந்த 51 பாலஸ்தீனர்களை சுட்டு கொன்ற இஸ்ரேல் appeared first on Dinakaran.

Tags : Israel ,Khan Younis ,Hamas ,Gaza Strip ,Iran ,Dinakaran ,
× RELATED பனிப்புயல் கோரத்தாண்டவம் எதிரொலி;...