×

அனுமதியின்றி மண் அள்ளி சென்ற 2 லாரிகள் பறிமுதல்

வைகுண்டம், ஜூன் 19: வைகுண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி தனியார் நிலங்களில் சரள் மண் அள்ளுவதாக தூத்துக்குடி ஆர்டிஓ பிரபுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர், பேட்மாநகரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டாரஸ் லாரி, டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டார். 2 லாரிகளிலும் அனுமதி சீட்டு இல்லாமல் சரள் மண் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை ஓட்டி வந்த சிறுபாடு பகுதியைச் சேர்ந்த இலங்கேஸ்வரன், முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்த கனிகுமார் ஆகிய இருவரையும், 2 லாரியையும் வைகுண்டம் காவல் நிலையத்தில் ஆர்டிஓ ஒப்படைத்தார். மேலும் மூலக்கரை பகுதியில் மண் அள்ளுவதாக கிடைத்த தகவலின் பேரில் ஆர்டிஓ பிரபு சென்றார். ஆனால் மண் அள்ளிக் கொண்டிருந்த ஜேசிபி மற்றும் லாரி ஓட்டுநர்கள் தப்பியோடி விட்டனர். இதுகுறித்து ஆர்டிஓ அளித்த புகாரின் பேரில் வைகுண்டம் போலீசார் விசாரிக்கின்றனர்.

The post அனுமதியின்றி மண் அள்ளி சென்ற 2 லாரிகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi RTO ,Prabhu ,Vaikundam ,Bedmanagaram ,Taurus ,Dinakaran ,
× RELATED மூதாட்டிகளிடம் சில்மிஷம் வன்கொடுமை சட்டத்தில் வாலிபர் கைது