×

அரசு பள்ளியில் 2ம் வகுப்பு மாணவி சாவு ஆசிரியை சஸ்பெண்ட்

ரெட்டிச்சாவடி: கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அடுத்த கீழ்அழிஞ்சிபட்டு இருளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (35), இவரது மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு பிரியதர்ஷினி (7), மதுமிதா (3) என்ற மகள்கள் உள்ளனர். பிரியதர்ஷினி அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு சென்ற பிரியதர்ஷினி திடீரென வாந்தி எடுத்து வலி தாங்காமல் அழுதுள்ளார். இதனால் வகுப்பறையில் சிறிது நேரம் படுக்க வைத்துள்ளனர். தொடர்ந்து வீட்டிற்கு ஒரு நபருடன் அனுப்பி உள்ளனர். பிரியதர்ஷினியை அவரது மாமா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். பின்னர் புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.இதையடுத்து பள்ளி ஆசிரியை ரேவதியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

The post அரசு பள்ளியில் 2ம் வகுப்பு மாணவி சாவு ஆசிரியை சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Reddychavadi ,Kanagaraj ,Vennila ,Irular ,Keelaljinjipattu ,Cuddalore district ,Priyadarshini ,Madhumita ,Panchayat Union Middle School ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...