சென்னை: கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்2 தேர்வில் ஓரிரு பாடங்களில் தோல்வி அடைந்த மாணவ மாணவியருக்கு தற்போது துணைத் தேர்வு நடக்க இருக்கிறது. இந்த தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகள் தேர்வுத்துறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
விண்ணப்பித்துள்ள மாணவ மாணவியர் இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து தங்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தனித் தேர்வர்களாக தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளோர் மேற்கண்ட இணைய தளத்தில் தங்களின் விண்ணப்ப எண் அல்லது நிரந்தரப் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். துணைத் தேர்வுக்கான தேர்வு அட்டவணை இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
The post பிளஸ்2 துணைத் தேர்வு ஹால்டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் appeared first on Dinakaran.
