×

அண்ணாமலை கருத்துக்கு தமிழிசை எதிர்ப்பு: அதிமுக – பாஜக கூட்டணி குறித்து அமித்ஷா கூறியதுதான் பாஜக நிலைப்பாடு!

சென்னை: அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாக அமித்ஷா கூறியது மட்டுமே கட்சியின் நிலைப்பாடு என முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக-வும் பாஜக-வும் கூட்டணி அமைத்துள்ள நிலையில், இனி தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி ஆட்சி நடைபெறும் என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார். ஆனால், இதற்கு மாறாக, அண்ணாமலை சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாகவும், கூட்டணி அரசு அல்ல, பாஜக அரசுதான் அமையும் என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி குறித்து அண்ணாமலை பொதுவெளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது என்று முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழிசை கூறியதாவது; அதிமுக – பாஜக கூட்டணி குறித்து அமித்ஷா சொன்னதுதான் அதிகாரப்பூர்வமான கருத்து என்றும், நயினார் நாகேந்திரன் சொல்வதுதான் கட்சியின் கருத்து என்றும், அண்ணாமலை சொல்வது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும் தமிழிசை சௌந்தரராஜன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும்,அண்ணாமலை பொதுவெளியில் பேசக் கூடாதென மேலிட மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டியிடம் உட்கட்சி, கூட்டணி குறித்து தமிழிசை விவாதித்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற அண்ணாமலைதான் காரணம் எனவும் தமிழிசை கூறினார். மீண்டும் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறும் நிலை வரக் கூடாது என தமிழிசை கூறியுள்ளார். பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதகார் ரெட்டியிடம் தமிழிசை 40 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்.

The post அண்ணாமலை கருத்துக்கு தமிழிசை எதிர்ப்பு: அதிமுக – பாஜக கூட்டணி குறித்து அமித்ஷா கூறியதுதான் பாஜக நிலைப்பாடு! appeared first on Dinakaran.

Tags : Tamilisai ,Annamalai ,BJP ,Amit Shah ,AIADMK- ,BJP alliance ,Chennai ,Tamil ,Nadu ,Tamilisai Soundararajan ,AIADMK ,2026 assembly elections ,Tamil Nadu… ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் 10 பேர் காயம்..!!