×

அமெரிக்காவில் பரபரப்பு மினசோட்டா மாகாண மாஜி சபாநாயகர், கணவர் சுட்டு கொலை

வாஷிங்டன்: அமெரிக்காவில் மினசோட்டா மாகாண மாஜி சபாநாயகர், அவரது கணவர் சுட்டுக்கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாகாண சட்ட பேரவையின் முன்னாள் சபாநாயகர் மெலிசா ஹார்ட்மேன் மற்றும் அவரது கணவர் ஹார்ட்மேன் ஆகியோர் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் நேற்று தங்களுடைய வீட்டில் இருந்த போது மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டனர். அதே போல், ஜனநாயக கட்சியின் மாகாண சட்ட பேரவை உறுப்பினர் ஜான் ஹாப்மேன் மீதும் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில் அவர் பலத்த காயமடைந்தார். முன்னாள் சபாநாயகர், அவரது கணவர் கொல்லப்பட்டது அரசியல் படுகொலை என்று கூறப்படுகிறது. போலீஸ் போல் வேடம் அணிந்து வந்த மர்ம நபர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மினசோட்டா ஆளுநர் டிம் வால்ஸ், 2 பேரை சுட்டு கொலை மற்றும் ஒருவர் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகிறார்கள் என்றார்.

The post அமெரிக்காவில் பரபரப்பு மினசோட்டா மாகாண மாஜி சபாநாயகர், கணவர் சுட்டு கொலை appeared first on Dinakaran.

Tags : Minnesota ,State Speaker ,Washington ,State ,Speaker ,United States ,Former Speaker ,Minnesota State Legislature ,Melissa Hartman ,Hartman ,Democratic Party.… ,America ,
× RELATED தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில்...