×

வெங்கமேடு செங்குந்தர் தெருவில் வடிகால் உடைந்து சேதம் விரைந்து சீரமைக்க கோரிக்கை

 

கரூர், ஜூன் 14: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு செங்குந்தர் தெருவில் சாலையில் வடிகால் பள்ளம் உடைந்து சேதமடைந்துள்ளதால் விரைந்து சீரமைக்க வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் செங்குந்தர் தெரு உள்ளது. இந்த தெருவின் இருபுறமும் அதிகளவு குடியிருப்புகளும், வர்த்தக நிறுவனங்களும் உள்ளது. அதிகளவு வாகன போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த தெரு சாலையில் வடிகாலில் ஏற்பட்ட பள்ளத்தை மறைக்கும் வகையில் கற்கள் வைத்து மறைக்கப்பட்டுள்ளது.

இவை வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு ஆபத்துக்களை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. மேலும், இரவு நேரங்களில வாகனங்கள் இந்த பகுதியில் எளிதாக செல்ல முடியாத சூழல் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் இந்த பகுதியை பார்வையிட்டு, வடிகால் பள்ளத்தை விரைந்து சீரமைத்து வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post வெங்கமேடு செங்குந்தர் தெருவில் வடிகால் உடைந்து சேதம் விரைந்து சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vengamedu Sengundar Street ,Karur ,Karur Corporation ,Sengundar Street ,Vengamedu ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணராயபுரம் பகுதியில் மது விற்ற 2பேர் கைது: மாவட்ட கலெக்டர் தகவல்