×

ஏர் இந்தியா விமானம் விபத்து; விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கி 241 பேர் உயிரிழந்த விவகாரத்தில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளார். ஹைட்ராலிக் சோதனை உள்பட 6 வகையான சோதனைகளை மேற்கொள்ள உத்தரவு. ஏர் இந்தியா இயக்கும் போயிங் வகை விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு. “ஏர் இந்தியாவுக்கு சொந்தமான போயிங் 787 -8/9 ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்”. “எரிபொருள் அளவீடு மற்றும் அவை சார்ந்த அமைப்புகளை சோதனை செய்ய வேண்டும்”. “Cabin air compressor மற்றும் அவை சார்ந்த அமைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும்”. “மின்னணு எந்திர கட்டுப்பாட்டு அமைப்பை சோதனை செய்ய வேண்டும்”. 15 நாள்களுக்குள் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

 

The post ஏர் இந்தியா விமானம் விபத்து; விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Air India ,Directorate General of Civil Aviation ,Ahmedabad ,Boeing ,Dinakaran ,
× RELATED 20 பேர் சடலங்கள் மீட்பு குஜராத் பாலம்...