- Edapadi
- அத்தமுக-பாஜா கூட்டணி
- செல்லூர் ராஜு தென்ஷன்
- அட்டாமுக-பாஜக கூட்டணி
- பொது செயலாளர்
- செல்லூர் ராஜு தென்ஷன்
- பூமி பூஜை
- மதுரை மாவட்டம்
- திருப்பரங்குந்தரம் ஒரட்சி ஒன்றியம்
- யூருடி அஹம்பா
- அத்தமுக்-பாஜா
திருப்பரங்குன்றம்: அதிமுக-பாஜக கூட்டணி குறித்து என்னிடம் கேட்காதீர்கள்; எங்கள் பொதுச்செயலாளரிடம் கேளுங்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ டென்ஷன் ஆனார். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், ஏற்குடி அச்சம்பத்தில் திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது: அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதிமுக-பாஜக கூட்டணி குறித்த கேள்விகளை எங்களது பொதுச்செயலாளரிடம் கேளுங்கள். என்னிடம் கேட்காதீர்கள். கூட்டணி குறித்து எங்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள். அமித்ஷாவிடம் பேசியது குறித்தும், கூட்டணி குறித்தும் எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
The post அதிமுக-பாஜ கூட்டணி குறித்து எடப்பாடியிடம் போய் கேளுங்கள்: செல்லூர் ராஜூ டென்ஷன் appeared first on Dinakaran.
