×

ஊரடங்கு காலத்தில் நேற்று கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியது தொடர்பாக 05 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்: ரூ.4.39 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலத்தில் நேற்று (31.01.2022)  கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியது தொடர்பாக 05 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 1,374 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.4,39,500 அபராதம் வசூலிக்கப்பட்டது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் 10.05.2021 முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்த நிலையில், தமிழக அரசு 15.02.2022 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், முறையான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பணிகளை தீவிரபடுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகரில் உள்ள 11 காவல் மாவட்ட எல்லைகள் மற்றும் அனைத்து காவல் நிலைய எல்லைகளில் வாகனத் தணிக்கைச் சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து, தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் குழுவினர் நேற்று (31.01.2022) மேற்கொண்ட வாகனத் தணிக்கை மற்றும் ரோந்து கண்காணிப்பு சோதனையில், கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியது,  05 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 1,374 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.4,39,500 அபராதமும் வசூலிக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதால், பொதுமக்கள் தமிழக அரசின் கெரரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து கொரோனா தொற்றை தடுக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. …

The post ஊரடங்கு காலத்தில் நேற்று கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியது தொடர்பாக 05 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்: ரூ.4.39 லட்சம் அபராதம் வசூல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,government of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED அங்கீகரிக்கப்படாத CNG/LPG மாற்றங்கள்...