×

உலகக் கோப்பை கால்பந்து தொடர் சவுதியை வீழ்த்தி ஆஸ்திரேலியா தகுதி

ஜெட்டா: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 2026ம் ஆண்டு தென் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் 48 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடருக்கான தகுதிச் சுற்று பல்வேறு கண்டங்களில் நடைபெற்று வருகின்றன. இதில் ஆசிய கண்டங்களைச் சேர்ந்த அணிகளுக்கான தகுதிச் சுற்றின் 3வது கட்ட ஆட்டம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடந்தது.

‘சி’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா – சவுதி அரேபியா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் 42-வது நிமிடத்தில் கானர் மெட்கால்பும், 48-வது நிமிடத்தில் மிட்ச் டியூக்கும் கோல் அடித்து அசத்தினர். இந்த வெற்றியின் மூலம் ‘சி’ பிரிவில் 2-வது இடம் பிடித்து ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலிய அணி.

உலகக் கோப்பை தொடருக்கு அந்த அணி தொடர்ச்சியாக 6-வது முறையாக தகுதி பெற்றுள்ளது. ஆசியாவில் இருந்து இதுவரை 2026-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு ஈரான், ஜப்பான், தென் கொரியா, உஸ்பெகிஸ்தான், ஜோர்டான், ஆஸ்திரேலியா ஆகிய 6 அணிகள் தகுதி பெற்றுள்ளன.

The post உலகக் கோப்பை கால்பந்து தொடர் சவுதியை வீழ்த்தி ஆஸ்திரேலியா தகுதி appeared first on Dinakaran.

Tags : Australia ,World Cup ,Saudi Arabia ,Jeddah ,FIFA World Cup ,South America ,United States ,Canada ,Mexico ,Dinakaran ,
× RELATED அடிலெய்டில் ஆஸ்திரேலியா அதிரடி: 82...