×

கருட சேவை பிரமோற்சவ தேர் திருவிழா திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் செங்கம் வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில்

செங்கம், ஜூன் 12: செங்கம்  ருக்மணி சத்ய பாமா சமேத வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் வைகாசி வளர்பிறையில் கருடசேவை பிரமோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். பிரமோற்சவத்தின் ஏழாம் நாளான நேற்று விழாவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் வேணுகோபால சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரடி வீதி வழியாக தேர் வலம் வந்து நிறைவாக கோயில் வளாகத்தை நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் அறங்காவலர்கள் குழு தலைவர் அன்பழகன், திருப்பணி குழு தலைவர் கஜேந்திரன், சக்தி பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் வெங்கடாஜலபதி, அறங்காவலர்கள் தர் செந்தில் குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வணங்கி வழிபட்டனர். தேர்த்திருவிழாவை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post கருட சேவை பிரமோற்சவ தேர் திருவிழா திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் செங்கம் வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில் appeared first on Dinakaran.

Tags : Garuda Seva Pramotsava Chariot Festival ,Chengam Venugopal Parthasarathy Perumal Temple ,Chengam ,Rukmani ,Sametha Venugopal Parthasarathy Perumal ,Temple ,Vaikasi Vallabhbira ,Pramotsava ,Deeparathan ,
× RELATED ஊர்நாட்டாண்மை கொலை தலைமறைவான 2 பேர்...