×

ஐசிசி யு-19 உலக கோப்பை: அரையிறுதியில் ஆஸி.யுடன் மோதுகிறது இந்தியா

ஆன்டிகுவா: ஐசிசி யு-19 உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் அரையிறுதியில், ஆஸ்திரேலிய அணியின் சவாலை சந்திக்கிறது இந்தியா. வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் இந்த தொடரின் காலிறுதியில் வங்கதேச யு-19 அணியுடன் மோதிய இந்தியா யு-19 அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. கூலிட்ஜ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச… வங்கதேசம் 37.1 ஓவரில் 111 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. மெஹராப் 30, அய்ச் மோலா 17, ஆஷிகுர் ஸமான் 16 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.இந்திய யு-19 பந்துவீச்சில் ரவிகுமார் 3, விக்கி 2, ராஜ்வர்தன், கவுஷல், ரகுவன்ஷி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்திய யு-19 அணி 30.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 117 ரன் எடுத்து வென்றது. ரகுவன்ஷி 44, ரஷீத் 26, கேப்டன் யஷ் துல் 20*, கவுஷல் 11* ரன் விளாசினர். வங்கதேச பந்துவீச்சில் ரிப்பன் மொண்டால் 4 விக்கெட் கைப்பற்றினார். ரவிகுமார் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.ஜன. 28ம் தேதி நடந்த காலிறுதியில் 119 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் யு-19 அணியை எளிதாக வீழ்த்தி ஆஸ்திரேலியா யு-19 அணி அரையிறுதிக்கு முன்னேறியது. நாளை நடைபெறும் முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் யு-19 அணியுடன் இங்கிலாந்து யு-19 அணி மோதுகிறது. பிப்.2ம் தேதி நடக்கும் 2வது அரையிறுதியில் இந்தியா – ஆஸ்திரேலியா பலப்பரீட்சையில் இறங்குகின்றன….

The post ஐசிசி யு-19 உலக கோப்பை: அரையிறுதியில் ஆஸி.யுடன் மோதுகிறது இந்தியா appeared first on Dinakaran.

Tags : ICC U-19 World Cup ,India ,Aussies ,Antigua ,Australia ,ICC U-19 World Cup ODI ,Dinakaran ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...