×

10 ஆயிரம் பாம்புகளை பிடித்தவர் திருப்பதி தேவஸ்தான ஊழியரை பாம்பு கடித்தது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான வனத்துறையில் ஊழியராக பணியாற்றுபவர் பாஸ்கர். இவர் திருப்பதி ஏழுமலையான் கோயில் பகுதியில் உள்ள இடங்கள் மற்றும் குடியிருப்பு, கடைகள், வணிக வளாகங்களில் புகுந்து விடும் பாம்புகளை லாவகமாக பிடிப்பார். இதுவரை 10 ஆயிரம் பாம்புகளை பிடித்துள்ளார். இதனால் அவர் ‘‘பாம்பு பாஸ்கர்’’ என அழைக்கப்பட்டார். வயது முதிர்வு காரணமாக வனத்துறையில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனாலும், பாஸ்கருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தொடர்ந்து பணி வழங்கினர். இந்நிலையில், கடந்த 28ம் தேதி இரவு அப்பகுதியில் ஊர்ந்து சென்ற ஒரு பாம்பை அவர் பிடிக்க முயன்றார். அப்போது, அவரை பாம்பு கடித்துள்ளது. திருப்பதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது….

The post 10 ஆயிரம் பாம்புகளை பிடித்தவர் திருப்பதி தேவஸ்தான ஊழியரை பாம்பு கடித்தது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Tirupati Devasthanam ,Tirumala ,Bhaskar ,Tirumala Tirupati Devasthanam ,Tirupati Eyumalayan Temple ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை...