×

கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை!!

சென்னை: கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அனைத்து போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர்களுடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இரவு நேரங்களில் போதிய பேருந்துகள் இயக்கப்படுவது இல்லை என புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. கூடுதல் பேருந்து இயக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் விரிவான ஆலோசனை நடத்தி வருகிறார்.

The post கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Sivashankar ,Kalampakkam ,Chennai ,Transport Minister ,Chennai Secretariat ,Chennai-Trichy National Highway… ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலையில் சாலை விபத்தில்...